புதிய தலைமைச் செயலர் நியமனம்:

0
748

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

எழுத்தாளரும், பேச்சாளருமான வெ. இறையன்பு ஏற்கெனவே தமிழக மக்களிடத்தில் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இடத்தில் நன்கு பரிச்சயமானவர். 1988ஆம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்த இவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். நாகை மாவட்ட சார் ஆட்சியராக தனது பணியைத் தொடங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார். சுற்றுலாத்துறை செயலாளராகவும் இருந்துள்ளார். மேலும் கூடுதல் தலைமைச் செயலாளர் பதவியும் வகித்துள்ளார். 2019லிருந்து அண்ணா மேலாண்மை கல்வி நிறுவனத்தின் இயக்குநராக பதவி வகித்து வந்தார்.

தற்போது, தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here