பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு…!

0
124

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டதை அடுத்து ஆசிரியர்கள் பணிக்கு தயாராக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு. வரும் 21ம் தேதி பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதால் அனைத்து ஆசிரியர்களும் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதற்காக 21ஆம் தேதி அனைத்து ஆசிரியர்களும் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் விவரங்கள் குறித்த முழு விவர பட்டியலை ஆசிரியர்கள் வரும் 21ஆம் தேதி வழங்க வேண்டும்.

மாணவர்கள் தாங்கள் இருக்கும் பகுதியிலேயே தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் வசதிக்காக 5012 தேர்வு மையங்கள் மட்டுமே இருந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக 12,000 தேர்வு மையங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வீடுகளுக்கு சென்ற மாணவர்களை தேர்வு நடைபெறும் நாட்களுக்கு 3 நாள் முன் அழைத்து வந்து உணவு வசதியுடன் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும். மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் இ-பாஸ் வழங்கப்படும்.

அரசு பள்ளியில் உள்ள தேர்வு மையங்களுக்கு தனியார் பள்ளி ஆசிரியர்களும், தனியார் பள்ளியில் உள்ள தேர்வு மையங்களில் அரசு பள்ளி ஆசிரியர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மாணவர்களுக்கு இ-பாஸ் வழங்குவதில் தடை ஏற்படாத வகையில் தனி கவனம் செலுத்தப்படும். நுழைவுச்சீட்டு ஆன்லைன் மூலமாக வழங்கப்படும்.

ஒரு தேர்வு அறைக்கு 20 மாணவர்கள் என்ற நிலையை மாற்றி ஒரு அறைக்கு 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here