பள்ளிகளுக்கு விடுமுறை; திரையரங்குகள்,மால்கள் மூட உத்தரவு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

0
344

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; 

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தேசிய பேரிடர் நிதியில் இருந்து 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள மழலையர் பள்ளிகள், தொடக்கப்பள்ளிகளுக்கு(எல்.கே.ஜி  முதல் முதல் 5 ஆம் வகுப்பு வரை) மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாநில எல்லைகளில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் வெளிமாநிலங்களுக்குச் செல்ல வேண்டாம் எனவும் பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here