பயங்கர தீ விபத்து – ஏராளமான லாரிகள் சேதம்:

0
608

சேலத்தில் லாரி பழுது பார்க்கும் பட்டறையில் மற்றும் பஞ்சர் கடையில் தீ பயங்பர விபத்து ஏற்பட்டது. விபத்தில், இரண்டு பழைய கார்கள், 30 லாரி டயர்கள் மற்றும் லாரி உபரி பாகங்கள் முழுவதும் எரிந்து நாசமாகின.

சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள கரட்டூர் என்ற பகுதியில் மணி என்பவருக்கு சொந்தமான பஞ்சர் கடை இயங்கி வருகிறது. இதனருகே 2 லாரி பழுது பார்க்கும் பட்டறை வரிசையாக அமைந்துள்ளது.இங்கு அதிகாலை நேரத்தில் முதலில் லாரி பழுதுபார்க்கும் பட்டறை பட்டறையின் பின்புறம் தீப்பற்றி எரிய தொடங்கியது.பின்னர் தீ மளமளவென பரவி பஞ்சர் கடை, இரண்டு லாரி பழுதுபார்க்கும் பட்டறைகள் மற்றும் இரண்டு பழைய கார்கள் முழுவதும் பற்றி எரியத் தொடங்கியது.

பின்னர் தகவலறிந்து விரைந்து வந்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரப் போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் இரண்டு பழைய கார்கள், பஞ்சர் கடையில் இருந்த 30 மேற்பட்ட டயர்கள், லாரி உதிரிபாகங்கள் என 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமாகியது. தீ எவ்வாறு பற்றியது என்பது குறித்து கொண்டலாம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திடீரென 3 பட்டறைகள் அடுத்தடுத்து தீப்பற்றி எரிந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here