பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய இளைஞர்கள்- பிறந்தநாள் பரிசு வழங்கிய காவல்துறை

0
841

விழுப்புரம் அருகே வீச்சரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்திய மூன்று பேருக்கு காவல்துறையினர் பிறந்தநாள் பரிசு வழங்கினர்.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கிராமத்தில் வசித்து வருபவர் மணிகண்டன்.இவரது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக நண்பர்கள் சுந்தரமூர்த்தி, பாண்டியன் தமிழ் அழகன் கணபதி, வீரபாண்டி ஆகியோர் சிறப்பு ஏற்பாடு செய்திருந்தனர். இவர்கள் அனைவரும் ராஜபாளையம் தெருவில் ஒன்று கூடி பொது இடத்தில் கேக் வெட்டிக் கொண்டாடத் திட்டமிட்டனர்.

இந்த கொண்டாட்டத்தில் சற்று வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக விபரீத திட்டம் தீட்டிய நண்பர்கள் மணிகண்டனை வீச்சு கத்தியால் கேக் வெட்ட செய்திருக்கிறார்கள். இந்த நிகழ்வினை போட்டோ மற்றும் வீடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

இதனை காணொளி மூலம் கண்ட அரகண்டநல்லூர் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிறந்த நாள் கொண்டாடிய நண்பர்களுக்கு சிறந்த முறையில் பிறந்தநாள் பரிசு வழங்கினர். முக்கிய குற்றவாளியான மணிகண்டன், தமிழ்அழகன், பாண்டியன் ஆகிய மூவரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் போது வீட்டில் இருந்தபடி பிறந்தநாள் கொண்டாததால் இப்படி சிறையில் கொண்டாட வேண்டிய நிலைமையை ஏற்பட்டுள்ளதை நினைத்து அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here