144 தடை உத்தரவினால் செங்கல்பட்டு மாவட்டம் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் சுமார் 7500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் தினக் கூலிக்கு செல்பவர்கள், உணவுக்கே வழியில்லாமல் வறுமையில் வாடும் இந்த மக்கள் தங்கள் அவல நிலையை மனுவாக எழுதி அனைவரும் கையொப்பம் இட்டு திருவள்ளுவர் மக்கள் பொது நல விழிப்புணர்வு சங்கத்தின் முலம் செம்மஞ்செரி காவல் ஆய்வாளர் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.
நோயை விட கொடியது பசி அதை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
– ஷர்மிளா