நோபல் பரிசு உருவான கதை: #குட்டி ஸ்டோரி

0
568

ஆல்ஃபரட், அன்று தன் தொழிற்சாலையில் உள்ள செய்திதாளில் இடம் பெற்றுள்ள ஒரு கட்டுரையை பார்த்து மிரண்டுப் போனார். இதில் “மரண வியாபாரி” உயிர்ப் பிரிந்தது என்ற தலைப்பில் பிரான்ஸ் மொழியில் அந்த கட்டுரை எழுதப்பட்டு இருந்தது. அதாவது, இந்த செய்திதாளை படித்துக் கொண்டிருக்கும் ஆல்ஃபரட் இறந்து விட்டதாக கருதி வெளிவந்த கட்டுரை இது.

தான் இறந்து விட்டதாக எழுதப்பட்ட கட்டுரையில் ஏன், தன்னை “மரண வியாபாரி” என்று குறிப்பட வேண்டும் என்று ஆல்ஃபரடுக்கு புரியவில்லை.

1880 காலக் கட்டங்களில் சுவீடன் நாட்டிற்குச் சென்று ஆல்ஃபரட்-ஐ பார்த்தால் தெரியும்.அவர் ஒரு விஞ்ஞானி.”டைனமைட்” என்னும் வெடிமருந்தை கண்டுப்பிடித்தவர் அவர், தான். உள்நாட்டுப் போரின் போது, அந்த வகை வெடிமருந்தை பயன்படுத்தி பிரான்ஸ் நாடு உட்பட சில நாடுகள் மாறி…மாறி தாக்கிக் கொண்டனர். இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

அதுமட்டுமல்லாமல், நாச வேலைகளுக்கும் இந்த வெடிமருந்து பயன்படுத்தப் பட்டது.
இது ஒருபுறம் இருக்க,மற்றொரு புறம் கட்டமானப் பணிகள், அரசு சார்பில் சுரங்கம் தொண்டுவது உள்ளிட்ட வேலைகளும் இது பயன்பட்டது.

எது,எப்படியோ இந்த “டைனமைட்” என்னும் வெடிமருந்தால் பெரும் பணக்காரர் ஆனார், ஆல்ஃபரட்.

ஆம், செய்திதாளை படிக்கும் வேளையில் ஆல்ஃபரட் சுவீடன் நாட்டில் மிகப்பெரும் கோடீஸ்வரர். டைனமைட் என்னும் வெடிமருந்தால் பல கோடிகள் அவரைத் தேடி,தேடி வந்தன.

இருப்பினும், இத்தனை நாள்கள் ,தான் கண்டுப்பிடித்த வெடிமருந்து மக்களுக்கு பயன்படுகிறது.மனித நேரத்தை மிஞ்சமாகிறது என்று நினைத்த ஆல்ஃபரட், இந்த செய்திக் கட்டுரை பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தார்.

நீண்ட நேர யோசனைக்கு அவர் ஒரு முடிவுக்கு வந்தார்.

என்னை மக்கள் திட்டி இருக்கலாம், கெட்டவனாக நினைத்து இருக்கலாம், என்னால் பலர் உயிரிழந்திருக்கலாம், ஆனால் நான் இறந்த பின் மக்கள் என்னை நல்ல விதமாக தான் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணினார், ஆல்ஃபரட்.

சட்டென தன் உயி்லை, அவரே எழுதத் தொடங்கினார்.

பல கோடி ரூபாய் மதிப்பிலான தன் சொத்து முழுவதையும் பயன்படுத்தி ஒரு விருதை உருவாக்க வேண்டும். இந்த விருதை உலக அளவில் அறிவியல், விஞ்ஞானம், கணிதம், அமைதிக்காப் பாடுவடுபவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

ஆல்ஃபரட்-இன் குடும்ப பெயரான “நோபல்” என்ற பெயரில் இன்று வரை ஆண்டுத்தோறும் உலக அளவில் சாதித்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டு் வருகிறது.

இப்படி தான் உருவானது, “நோபல் பரிசு”

நோபல் பரிசு, நோபல் அறக்கட்டளை சார்பில் வழங்கப்படுபவை.அரசு சார்பில் இல்லை.

1901ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

நோபல் பரிசினை இதுவரை மூன்று தமிழர் பெற்றுள்ளனர். இந்தப் பெருமைக்குரியோர் ச. வெ. இராமன் (1930), சுப்பிரமணியன் சந்திரசேகர் (1983),  வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (2009) ஆவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here