நீதிமன்றத்தை அவமதித்து பேசியதாக சூர்யா மீது நடவடிக்கை கோரி நீதிபதி கடிதம்

0
29

நடிகர் சூர்யா நீதிமன்றத்தை அவமதித்து பேசியதாகவும்  எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

 நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கையில், கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

lஇந்த நிலையில், நீதிமன்றத்தின் செயல்பாட்டை விமர்சித்து அறிக்கை வெளியிட்ட நடிகர் சூர்யா மீது சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டுமென்று கோரி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், “என்னுடைய கருத்துப்படி, அந்த அறிக்கையானது நீதிபதிகளின் ஒருமைப்பாடு மற்றும் ஈடுபாட்டையும், நமது நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பையும் குறைமதிப்புக்கு உட்படுத்தும் வகையில் மட்டுமின்றி அதை தவறான முறையில் விமர்சித்துள்ளதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடரலாம்.இவரின் இத்தகைய கருத்தால் ,  நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது” என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here