நாட்டின் முதல் கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் 15ம் தேதி அறிமுகம்

0
78

நாட்டின் முதல் கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் 15ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவிப்பு…!

தற்போதைய கொரோனா சூழ்நிலையில், இதைவிட வேறு ஒரு நல்ல செய்தி எதுவும் இருக்க முடியாது. நாட்டில் தயாரிக்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசி (Corona Vaccine) ஆகஸ்ட் 15ஆம் தேதி, அதாவது சுதந்திர தினத்தன்று அறிமுகப்படுத்தப்படும். இதற்காக, இந்திய விஞ்ஞானிகள் தங்கள் பணிகளை முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டு, மருத்துவ பரிசோதனைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 15ஆம் தேதி கொரோனா தொற்றுக்கான முதல் தடுப்பூசி அறிமுகம்:
புதிய கொரோனா தடுப்பூசி (New Corona Vaccine) தயாராக உள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்) தலைவர் டாக்டர் பலராம் பார்கவா நாட்டின் அனைத்து முக்கிய மருத்துவக் கல்லூரிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

பாரத் பயோடெக் (Bharat Biotech) உடனான பொதுவான திட்டத்தின் கீழ் BBV152 COVID Vaccine என்ற பெயரில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி COVID-க்கு எதிராக செயல்படும். இதுதொடர்பாக, அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. எய்ம்ஸ் உட்பட நாட்டின் 13 மருத்துவமனைகளில் மருத்துவ பரிசோதனைகளை (Clinical Trials) விரைவுபடுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here