நன்னடத்தை காரணமாக விடுதலையான ஆயுள் தண்டனை கைதி வெட்டிக்கொலை…!

0
408

கும்பகோணம் அருகே நன்னடத்தை காரணமாக விடுதலையான ஆயுள் தண்டனை கைதி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்பந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி (வயது 40). இவர் கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த இவர் நன்னடத்தை காரணமாக 6 மாதங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று மாலை தனது வீட்டில் 3 பேருடன் மது அருந்திக்கொண்டிருந்த போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் 3 பேரும் செல்வமணியை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே செல்வமணி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்..

இதனைத் தடுக்க வந்த செல்வமணியின் மகளுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. செல்வமணியின் மகள் சிகிச்சைக்காக கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகவல் அறிந்து வந்த நாச்சியார்கோவில் காவல் நிலைய ஆய்வாளர் ரேகாராணி செல்வமணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் செல்வமணியை வெட்டிக் கொன்ற கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் முன் விரோதம் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என்று காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. நன்னடத்தை காரணமாக விடுதலையான ஆயுள் தண்டனை கைதி கொலையான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here