நடிகர் தவசி காலமானார்: ரசிகர்கள் சோகம்…!

0
1295

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்.

பாரதிராஜாவாவின் ‘கிழக்கு சீமையிலேயே’ படம் தொடங்கி ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ வரை 147 படங்களில் நடித்திருப்பவர் தவசி. சிவகார்த்திகேயன் – சூரி கூட்டணி நடிப்பில் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் இவருடைய கதாபாத்திரம் மிகவும் பிரபலம். கருப்பன் குசும்புகாரன் என இவர் பேசும் வசனம் இப்போதும் பிரபலமாக உள்ளது.

இவர் கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்படடு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மிகவும் மெலிந்த தோற்றத்துடன் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போய், மருத்துவச் செலவுக்காக உதவி கேட்டு அவர் வீடியோ வெளியிட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இவர் வெளியிட்ட வீடியோ கண்டு திரைப்படத் துறையில் இருந்து பல்வேறு பிரபலங்களும் மற்றும் பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்தனர். மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here