நடிகர் சிம்பு திருமணம் எப்போது? டி.ஆர் விளக்கம்…!

0
352

நடிகர் சிலம்பரசன் திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செய்தி அனைத்தும் வதந்திகள், அதை யாரும் நம்ப வேண்டாம் என டி.ராஜேந்தர் அறிக்கை…!

நடிகர் சிலம்பரசன் திருமணம் பற்றி அவரது தந்தையும் இயக்குநருமான டி.ராஜேந்தர் மற்றும் உஷா ராஜேந்தர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்…!

அனைவருக்கும் வணக்கம்…

எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிகைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மை தன்மை அற்றவை.

எங்கள் மகன் சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்னை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண் அமைந்ததும் சிலம்பரசன் திருமணம் பற்றிய நற்செய்தியை முதலில் பத்திரிகை வாயிலாக உங்கள் அனைவருக்கும் சந்தோஷத்துடன் அதிகாரப்பூர்வமாக நாங்களே அறிவிப்போம். அதுவரை வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று டி.ராஜேந்தர் மற்றும் உஷா ராஜேந்தர் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளனர்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here