நடிகர்.கருணாஸ் ஆலோசனை வழங்கிய சின்னம்மாவுக்கு இப்படியா?

0
382

சுத்தி மூன்னுப் பக்கம் தண்ணீ இருக்கு, தப்பிச்சுப் போக ஒரே வழி தா-னு, சின்னம்மா சசிகலாவுக்கு சொன்னவே, இந்த கருணாஸ்” இப்படி திரைப்பட நடிகரும், மூக்குலத்தோர் புலிப்படையின் தலைவருமான கருணாஸ் மேடையில் ஆவேசமாக பேசி, சில உண்மைகளையும் கட்டவிழ்த்து விட்டார்.

இத்தனை ஆண்டுகள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உடனிருந்த, சசிகலாவுக்கே கருணாஸ் அலோசனை வழங்கிய செய்தி அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதிமுகவினரால், சின்னம்மா என்று அழைப்பட்ட சசிகலா ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் பெங்களூரு பரப்பன அக்கரகாரம் சிறையில் அடைக்கப்பட்டு தற்போது வரை சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இதற்கிடையே வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் சிறைச் சென்றவர் சின்னம்மா சசிகலா. சென்ற முறை சசிகலாவுடன் சிறைச் சென்ற அவரது தோழியும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா இந்தமுறை சிறைச் செல்லவில்லை. காரணம் அவர் அப்போது உயிருடன் இல்லை. ஜெயலலிதா இறந்தவர் என்பதால் வழக்கில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலாவின் உடல்நிலை தற்போது கவலைகிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு, அதனால் சக்கர நாற்காலியின் மூலம் சசிகலா பௌரிங் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இன்று சசிகலா சி.டி ஸ்கேன் எடுக்க வேறொரு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றது பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

சசிகலா வெளிவரும் இச்சூழ்நிலையில், அவர் மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு் இருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here