திருப்பதியில் கொரோனாவுக்கு அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இதன் எதிரொலியாக பொதுமக்களின் பொது தரிசன சேவையை நிறுத்த பரிந்துரை செயல்ப்பட்டு வருகிறது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலை திருப்பதி கோவில் கடந்த ஜூன் மாதம் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டது. திருமலையில் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதித்த பின் கொரோனா தொற்று பரவ துவங்கியது. திருப்பதியிலும் நோய் தொற்று அதிகரித்தது. தேவஸ்தான ஊழியர்கள், அர்ச்சகர்கள் என இதுவரை 170 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் முதன் முதலில் அர்ச்சர்கர் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். முன்னாள் பிரதான அர்ச்சகரான 75 வயதாகும் சீனிவாசமூர்த்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் சிகிச்சைப்பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.