தள்ளிப்போனது “மாநாடு” – மிரட்டுவது யார்?…

0
113

நிறைய பிரச்னைகளுக்கு சொந்தக்காரரான  நடிகர். சிலம்பரசன் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், யுவன் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த இந்த திரைப்படம் சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது.

இதனையடுத்து நாளை உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழுத் தரப்பில்  அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தன. 

 தற்போது திட்டமிட்டபடி நாளை மாநாடு திரைப்படம் வெளியாகாது என அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டரில் பதிவிட்டியிருப்பது சிம்பு ரசிகர்கள் உட்பட அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இதுகுறித்த அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதன் பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருந்திருந்தேன்

தவிர்க்க இயலாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக் கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன். ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய்த் தொற்றுக்கு பின், மாஸ்டர்,டாக்டர் உட்பட சில படங்கள் மட்டும் தியேட்டர் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடை செய்து. இதை மிஞ்சும் வகையில் “மாநாடு” படத்தின் வசூல் இருக்கும் என திரையுலகினர்பட விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் நம்பி இருந்தனர். ஆனால் “மாநாடு” படம் வெளியிடுத் தள்ளிப் போயிருப்பது அனைத்து தரப்பினருக்கும் ஏமாற்றத்தையே தந்துள்ளது.

படத்தின் வெளியிட்டு விவகாரத்தில் ஆளும் கட்சியான திமுக செயல்படுவதாக தகவல் வெளியுள்ளது.

எப்போது படம் வெளியாகும் என படக்குழு தரப்பில் அறிவிக்கப்படு எனத் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here