தளபதி விஜய் காமன் டி.பி வெளியீடு: ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள்…!

0
379

வரும் 22ஆம் தமிழ் திரையுலகின் வசூல் மன்னன், அடுத்த சூப்பர் ஸ்டார் என்று வர்ணிக்கப்படும் தளபதி விஜய் பிறந்தநாள் வருவதை முன்னிட்டு காமன் டி.பி வெளியானது…!

வரும் ஜூன் 22ம் தேதி விஜய்யின் பிறந்தநாளை கொண்டாட அவரது ரசிகர்கள் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். தற்போது அதன் ஒரு பகுதியாக விஜய் பிறந்தநாள் காமன் டி.பி வெளிவந்து ட்விட்டரில் ட்ரெண்டாகி உள்ளது. மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், காஜல் அகர்வால், வரலக்ஷ்மி சரத்குமார், மோகன் ராஜா,சாந்தனு, ஹேமா ருக்மணி, அஜய் ஞானமுத்து உட்பட சினிமா துறையின் 20 பிரபலங்கள் இந்த காமன் டி.பி.யை வெளியிட்டு உள்ளனர்.

#THALAPATHYBdayFestCDP என்ற ஹெஸ் டேக் தற்போது தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. ஹெஸ் டேக்கில் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ட்விட்களை பதிவிட்டு விஜய் ரசிகர்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

ஜூன் 22ம் தேதி விஜய்யின் பிறந்தநாள் அன்று மாஸ்டர் படத்தின் அப்டேட் வெளிவரும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அது மட்டுமின்றி பிறந்தநாள் ஸ்பெஷலாக விஜய்யின் அடுத்த படமான தளபதி 65 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்டர் பட ட்ரெய்லர் எப்போது வெளியிடுவீர்கள் என்று தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் ரசிகர்கள் கேட்டு வரும் நிலையில் புதிய ரிலீஸ் தேதி முடிவான பிறகு தான் ட்ரெய்லர் வெளியிடப்படும் என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய ரிலீஸ் தேதிக்கு 4 அல்லது 5 வாரங்களுக்கு முன்பு ட்ரெய்லர் வெளியிடப்படும் என அவர் கூறியிருப்பதால் விஜய் பிறந்தநாளுக்கு மாஸ்டர் ட்ரெய்லர் வெளியாக வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

மாஸ்டர் ஷூட்டிங் முழுமையாக முடிக்கப்பட்ட நிலையில், இறுதிக்கட்ட பணிகள் கொரோனா லாக் டவுன் காரணாமாக நிறுத்தப்பட்டு இருந்தது. சமீபத்தில் அரசு அனுமதி அளித்ததனால் மீதம் இருக்கும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை லோகேஷ் கனகராஜ் தொடங்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here