தம்பி நல்லா இருக்கனும்பா – உதயநிதியை வாழ்த்தும் சேப்பாக்கம் தொகுதி மக்கள்:

0
531

எம்எல்ஏவாக பதவியேற்றது முதல் உதயநிதியின் செயல்பாடுகள் பலரையும் ஈர்த்து வருகிறது.. இதையடுத்து சேப்பாக்கம் மக்கள் மிக எளிதாக, தங்கள் தொகுதியின் எம்எல்ஏக்களை நெருங்கி குறைகளை சொல்லி வருகின்றனர்.

வாரிசு அரசியல் என்ற முத்திரையுடனேதான் இத்தனை நாட்களும் வஉதயநிதியின் அரசியல் நகர்கிறது… ஆனால், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி தரப்போறாங்க, உள்ளாட்சி துறை தரப்போறாங்க என்றெல்லாம் யூகங்கள் பறந்த நிலையில், அப்படி எதுவுமே தரப்படவில்லை.

இந்த புள்ளியில் இருந்துதான், வாரிசு அரசியல் என்பதே நொறுங்க ஆரம்பித்தது.. ஸ்டானின் மகன் என்பதையும் தாண்டி, என்ற ரூட்டில் ஜரூராக நடைபோட்டு வருகிறார்.

கடந்த ஒருவாரமாகவே உதயநிதி இப்படித்தான் தொகுதிக்குள் சுழன்று கொண்டிருக்கிறார்… எந்தெந்த பகுதிக்குள் சென்று ஆய்வு செய்கிறாரோ, அதை அவ்வப்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டு வருகிறார்.. அதன்படி, சேத்தியாதோப்பு குடியிருப்பு வாரிய பகுதியில் சாக்கடைகள் நடுத்தெருவில் ஓடும் நிலையில், அதிலேயே நடந்துவந்துதான் முழு ஆய்வையும் நடத்தினார்.. குப்பைகளை சுத்தம் செய்ய சொன்னார்..!

நேற்றுகூட, கொரோனாவால் தனிமைப் படுத்தப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்… நடுக்குப்பம், செல்லம்மாள் தோட்டம், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் வீதி வீதியாக சென்று, மக்களை சந்தித்து தற்போது பாதிப்பு அதிகமாக இருப்பதால் அனைவரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி அறிவுறுத்தினார்.. அரசு சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனவும் உறுதி அளித்தார்.

பாதிக்கப்பட்டோரின் வீடுகளுக்கு சென்று தேவையான அரசி, பருப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்களை நேரடியாக சென்று வழங்கினார்.. அங்கு முத்தையா தெருவில் ஆய்வு செய்தபோது, பொது கழிப்பிடம் ஒன்று காணப்பட்டது.. ஆனால், அது சிதிலமடைந்து காணப்பட்டது.. சுவரெல்லாம் பெயர்ந்து கொண்டு, பராமரிப்பு இன்றி, மிக அசுத்தமாக இருந்தது..

அந்த பகுதி மக்கள், பொது கழிப்பிடத்தை சரிசெய்ய வேண்டுமென சொன்னார்கள்.. உடனே, உதயநிதி எதைப்பற்றியும் கவலைப்படவில்லை.. டக்கென அந்த பாத்ரூமுக்குள் நுழைந்து பார்த்தார்.. இதையடுத்து, பாத்ரூமை சீரமைத்துத் தருமாறு மாநகராட்சி அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். பொதுவாக ஆய்வு என்றால், மேலோட்டமாக பலரும் பார்த்து செல்லும் நிலையில், பொதுக் கழிப்பிடத்தையும் சங்கோஜம் இல்லாமல், உதயநிதி ஆய்வு செய்தது சேப்பாக்கம் மக்களை வியக்க வைத்தது.

இந்த அளவுக்கு தொகுதியில் இறங்கி கவனிக்கிறீர்களே, நீங்கள் வெற்றி பெற்றதற்கு உங்கள் அப்பா என்ன சொன்னார்” என்று செய்தியாளர்கள் கேட்டனர்.. அதற்கு உதயநிதி, “உன்னை நம்பி இத்தனை வாக்கு வித்தியாசத்தில் சேப்பாக்கம் மக்கள் ஜெயிக்க வெச்சிருக்காங்க.. ஒழுங்கா போய் அங்கே எம்எல்ஏ வேலைய பாரு”ன்னு அப்பா சொன்னார்’ என்கிறார் உதயநிதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here