தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டை தமிழக அரசு மறுப்பதா?

0
178

தமிழக காவல்துறையில் துணை ஆய்வாளர் பணியிடங்களுக்கான 969 காலிபணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றுள்ளது. 

கடந்த செப்டம்பர் மாதம் உடற்தகுதி தேர்வு நடைபெற்றுள்ளது. இதனையடுத்து, நேர்முகத்தேர்வு என்பது ஒரு இடத்திற்கு 2 பேர் என்றவில் நடப்பது வழக்கமாகும். 

அப்பணியிடங்களுக்கு தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கான இட ஒதுக்கீட்டில் 196 காலிபணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது நேர்காணலுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அப்பட்டியலில்,  தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு முறையைப் பின்பற்றாது அதிர்ச்சியளிக்கிறது. 

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற துணை காவல் ஆய்வாளர் தேர்விலும் இதே போன்ற முறைகேடு நடைபெற்றது. எழுத்துத்தேர்வு, உடற்தகுதித்தேர்வு, நேர்முகத்தேர்வு என்று ஒவ்வொரு நிலையிலும் இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்பட்டால் மட்டுமே தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டினை முழுமையாக வழங்க முடியும். 

Official

இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, தமிழ் வழியில் பயின்றவர்களுகான இடஒதுக்கீடு முழுமையாகக் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தி உள்ளார்.

அதுவரை நேர்முகத்தேர்வு நடைபெறுவதை ஒத்திவைக்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள் விடுத்துள்ளார்.

தமிழ் வழியில் பயின்றோருக்கான இட ஒதுக்கீட்டை முழுமையாக வழங்கப்பட்டால் மட்டுமே, ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த இளைஞர்கள் துணை காவல் ஆய்வாளர் பணி உள்பட எந்த அரசு பணிகளிலும் சேர முடியும் என்பதை தமிழக அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றார்.

இவ்விவகாரத்தில் தலையிட தமிழக அரசு அலட்சியம் காட்டும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்படும். மேலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டத்தை முன்னெடுக்கும் என தமிழக அரசுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here