தமிழ் சினிமாவின் கட்டப் பஞ்சாயத்து இயக்கங்களை தடுத்திடு: சிம்பு ரசிகர்களின் ஒருமித்த கண்டன குரல்

0
144

நடிகர்.சிலம்பரசனுக்கு எதிராக தமிழ் திரையுலகில் பெரும் சதி நடப்பதாகவும், பணம் பறிக்கும் நோக்குடன் செயல்படும் கட்டப் பஞ்சாயத்து இயக்கங்களை கட்டுப்படுத்த வேண்டுமெனவும் சிலம்பரசன் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ள “மாநாடு” திரைப்படம், புத்தம்புதிய கதைக்களத்தில் அமைந்துள்ளது.

இந்த படத்திற்கு மறைமுகமாக பல்வேறு பிரச்னைகள் எழுந்து வருகின்றன. நடப்பு திரைப்பட விநியோகஸ்தர்கள் என்ற அமைப்பை உருவாக்கி, அருள்பதி என்பவர் கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டுவதாக சிலம்பரசனின் தந்தை டி.ராஜேந்தர், சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, நடிகர். சிலம்பரசன் படத்தின் போது மட்டும் சிலர் தொடர் பிரச்னை செய்வதாகவும், இந்த நிலைமை தொடர்ந்தால் பெரும் நட்சத்திரங்களின் படங்களை மூடக்குவதுப் போல சிறு,சிறு படங்களும் நசுக்கப்படும் என தமிழ் திரை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில், தமிழ் நடிகர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் மௌனம் காத்து வருகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

எனவே, தமிழக அரசு இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழ் சினிமா கட்டப் பஞ்சாயத்து அமைப்புகளிடம் சிக்கி விடும் என நடிகர்.சிலம்பரசன் ரசிகர்களும், தமிழ் திரையுலகினரும் வேதனை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here