தன்னார்வலர்கள் உதவ தடையில்லை: தமிழக அரசு விளக்கம்…!

0
671

ஏழை மக்களுக்கு தன்னார்வலர்கள் உதவி செய்ய எந்த தடையும் விதிக்கவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது…!

தன்னார்வலர்கள் ஏழை மக்களுக்கு உதவுவது குறித்து தமிழக அரசு அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளது. தன்னார்வலர்கள் உதவி செய்வதை தடுக்கவில்லை, உதவி செய்யும் வழிமுறைகளை மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கவே தன்னார்வலர்கள் உதவி செய்யும் வழிமுறை மாற்றப்பட்டுள்ளது.

மாநில அளவில் நிவாரணத்தை ஒருங்கிணைத்து செயல்படுத்த ஏற்படுத்தப்பட்ட 12 குழுக்களில், ஒரு குழு தன்னார்வலர்களின் தனித்திறன் மற்றும் ஆர்வத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்துவதற்கு, மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் தலைமையில் சீரிய முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே நம் மாநில மற்றும் இதர மாநில தொழிலாளர்கள், ஆதரவற்றோர், முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு, நிவாரணம் மற்றும் உதவிகள் வழங்கிட, 2,500க்கு மேற்பட்ட நிறுவனங்களும், 58 ஆயிரம் தன்னார்வலர்களும் தமிழ்நாடு அரசிடம் பதிவு செய்து, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, சமூக இடைவெளி மற்றும் சுகாதார பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்து நிவாரண உதவிகளை வழங்கிக் கொண்டு தான் இருக்கின்றனர்: தமிழக அரசு…

அரசின் நோக்கம் உதவி செய்வதைத் தடுப்பது அல்ல. தற்போதைய நோய்த் தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நிவாரண உதவிகள் முறையாகவும், பாதுகாப்பாகவும் வழங்கப்பட வேண்டும் என்பது தான் அரசின் நிலைப்பாடு. பேரிடர் காலங்களில் உதவுவது போல் தற்போது உதவ முன்வந்தால் கொரோனா பரவ வழிவகுத்துவிடும். மாவட்ட ஆட்சியர்களின் அனுமதியோடு, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தன்னார்வலர்கள் ஏழைகளுக்கு உதவலாம். தன்னார்வலர்கள் ஏழை மக்களுக்கு உதவுவது குறித்து தமிழக அரசு விளக்கம்

மக்களுக்கு பாதுகாப்பான முறையில் சென்றடைவதை உறுதி செய்யவே அரசு அறிவுறுத்தியதே தவிர, தடை விதிக்கவில்லை என அரசு தெளிவுபடுத்தப்படுகிறது. தன்னார்வலர்கள் உதவி செய்ய தடை என எதிர்க்கட்சியினர் உண்மைக்கு மாறாக பிரச்சாரம்: தமிழக அரசு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here