தடுப்பூசி தயாரிக்க இந்தியா ஒத்துழைப்பு தேவை: பில்கேட்ஸ்

0
8

கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தியில் இந்தியா முன்னணியில் உள்ளது. எனவே உலக நாடுகளுக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு தேவை என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: தடுப்பு மருந்து உற்பத்தியில் இந்தியா முன்னணியில் உள்ளது. இதனால், கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி செய்வதில் இந்தியாவின் ஒத்துழைப்பு உலக நாடுகளுக்கு தேவை. கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை அடுத்த ஆண்டு இந்தியா அதிகளவு உற்பத்தி செய்யும். இந்தியாவில் தடுப்பு மருந்து உருவாக வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர்.

அந்த மருந்து பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். அப்படி பாதுகாப்பாக இருக்கும் பட்சத்தில் அந்த மருந்து உலக நாடுகள் அனைத்திற்கும் வினியோகிக்கப்படும். அடுத்த ஆண்டின் முதல்காலாண்டில், பல கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிடும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here