தங்கப் பத்திரத்தின் விலையை வெளியிட்ட மத்திய அரசு

0
43

மத்திய அரசு  வெளியிடும் தங்கப்பத்திரத்தின் விலை கிராமுக்கு 5ஆயிரத்து 334-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள தங்கப்பத்திரத்தின் விலை குறித்து ரிசா்வ் வங்கி கூறுகையில், நடப்பு 2020-21 நிதியாண்டுக்கான ஐந்தாம் கட்ட தங்கப்பத்திர வெளியீடு இன்று தொடங்கி  வரும் 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஒரு கிராம் தங்கப்பத்திரத்தின் விலை 5 ஆயிரத்து 334-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. 999 சுத்த தங்கத்தின் கடந்த மூன்று வா்த்தக தின விலையை அடிப்படையாகக் கொண்டு இந்த விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பித்து தங்கப்பத்திரங்களை வாங்க பணம் செலுத்துவோருக்கு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, அவா்களுக்கு ஒரு கிராம் தங்கப்பத்திரம் 5 ஆயிரத்து 284 என்ற விலையில் விற்பனை செய்யப்படும். ஒரு தனிநபா் 1 கிராம் முதல் 4 கிலோ வரையில் இந்த தங்கப்பத்திரங்களில் முதலீடு செய்ய முடியும் என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஜூலையில் வெளியிடப்பட்ட நான்காம் கட்ட வெளியீட்டில் ஒரு கிராம் தங்கப்பத்திரத்தின் விலை 4 ஆயிரத்து 852-ஆக நிா்ணயம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள், பங்குச் சந்தைகளில் இந்த தங்கப்பத்திரங்கள் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here