டோப் அடிக்கும் கல்லூரி மாணவிகள்:

0
627

தமிழகத்தில்   சமீப காலங்களாக கல்லூரி மாணவர் மத்தியில் போதைக் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. சென்னை போன்ற ஹைடெக்- சிட்டியையும் தாண்டி மதுரை, திருச்சி, நெல்லை,குமரி என தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் கஞ்சா,போதைப் பாக்கு என சகல போதை வஸ்துகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.

அதிலும், கல்லூரி மாணவிகள் போதைப் பழக்கத்திற்குள் சிக்கியுள்ளதாக ஒரு ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பெண்கள் கல்லூரி விடுதி அறை, கல்லூரி வகுப்பறை என படிக்கும் இடங்களில் தான் போதைப் பொருட்கள் கல்லூரி மாணவிகளிடம் கைமாற்றப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலை இருட்டியதற்கு பின்னே, போதை வஸ்துகளை சுவைக்காமல், அதை பயன்படுத்தாமல் அவர்களால் இருக்க முடியாது என்ற சூழ்நிலைக்கு மாணவிகள் தள்ளப்பட்டு உள்ளனர். குறிப்பாக 18,19 வயது மாணவிகள் இந்த கொடிய வலைக்குள் சிக்கியது தான் இதில் பெரும் கொடுமை.

ஊர்விட்டு,ஊர் வந்து படிக்கும் மாணவிகள் தங்களை யார் கண்டுப் போகிறார்கள், யார் பார்த்தால் என்ன ? என்ற நினைப்புடன் இருப்பதால் இது போன்ற தவறுகளை செய்ய எளிதல் அவர்கள் துண்டப்படுகிறார்கள். கல்லூரியில் சீனியர் மாணவிகள் படிப்பை விடுத்து, போதைப் பொருட்களையும், அதை எப்படி பயன்படுத்துவது குறித்தும் தங்கள் ஜூனியர் மாணவிகளுக்கு கற்பித்தாகவும் கூறப்படுகிறது.

மாணவிகள், கல்லூரி விடுதி அல்லது தனியார் விடுதிகளில் தங்கும் போது போதைப் பொருட்களுக்கு அடிமையாவதால் படிப்பும், வாழ்க்கையையும் மட்டுமின்றி அவர்களை சார்ந்தவர்களையும் அவர்கள் இழக்கின்றனர். படிப்பில் நாட்டம் இல்லாமல் போவதும், தன்னை மறந்து இருப்பதுமாக கல்லூரி மாணவிகள் சீரழிக்கின்றனர்.

பல ஆண்களுடன் படுக்கையை பகிர்வதும், முறையற்ற உறவுக்கு கல்லூரி மாணவிகள் தள்ளப்படுவதும் தான் இதில், அதிர்ச்சிகரமான உண்மை.போதைப் பொருட்கள் பயன்படுத்தும் மாணவிகளை கண்டிக்கும் ஆண் பேராசிரியர்களே, தங்கள் சபல புத்திக்கும், காம இச்சைக்கும் பலமுறை பயன்படுத்திக் கொள்வது தான் வேதனையான ஒன்று.

பெற்றோர்கள், கல்லூரி ஆசிரியர்கள் தான் கல்லூரி மாணவிகளை கண்காணிக்க வேண்டும், கண்டிக்க வேண்டும் என்று இல்லை. மாணவிகள், தாங்கள் பள்ளி முடிந்து  கல்லூரி வந்து விட்டோம் என்ற எண்ணத்தில் இல்லாமல், சுய ஒழுக்கத்துடன் நடந்துக் கொண்டாலே போதும் மன சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்

போதைப் பொருட்கள் பயன்படுத்தும் சக தோழிகளை, நீங்கள் கண்டிக்க வேண்டும் அல்லது விலகிச் செல்ல வேண்டும். போதைப் பொருட்களை பயன்படுத்து உடல் நலத்திற்கு தீங்கானது என்பது போல சக மாணவிகள் பயன்படுத்துவதை அனுமதிப்பது.

போதைப் பொருட்கள் இல்லாத சமூகம் உருவாகட்டும், நாட்டின் வருங்களான  தூண்களான கல்லூரி மாணவிகளின் நல் எண்ணதோடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here