டிக்-டாக் உட்பட சீனாவின் 59 செயலிக்கு தடை…!

0
40

இந்தியாவில் டிக்-டாக் உள்ளிட்ட சீன நிறுவனங்களின் 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்ததுள்ளது…!

கிழக்கு லடாக் பகுதியில் உள்ள எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தினர் தொடர்ந்து அத்துமீறிய செயலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 15ஆம் தேதி இந்தியா-சீனா ராணுவத்தினர் இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனால், எல்லைப் பகுதிகளில் இரு நாடுகளும் ராணுவத்தை குவிந்து, எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. எல்லையில் தாக்குதலைத் தொடர்ந்து, சீனப் பொருட்களை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தில் சில தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சீன நிறுவனங்களின் செல்போன் செயலிகளை உடனடினயாக தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரையும் வழங்கப்பட்டது.

அதன்படி, சீன நிறுவனங்களின் டிக்-டாக், ஷேர்-இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், வி-சாட், யூ-கேம் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு நேற்றிரவு உத்தரவு பிறப்பித்துள்ளது

இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக சீனாவைச் சேர்ந்த செல்போன் செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கிளேஷ்-ஆப்-கிங், டியு பேட்டரி சேவர், யூகேன் மேக் அப், சிஎம் பிரவுசர், நியூஸ்டர், பியூட்டி பிளஸ், யுசி நியூஸ், பிகோ லைவ் உள்ளிட்டவையும் தடை செய்யப்பட்ட 59 செயலிகளுள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here