தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் குரூப்- 1, குரூப் – 2 உள்ளிட்ட அனைத்து தேர்வுகளிலும் புதிய நடைமுறை மற்றும் கட்டுப்பாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
வரும் ஜனவரி 3ஆம் தேதி நடக்கும் குரூப் 1 தேர்வில் இருந்து புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகிறது.
ஜனவரி 3 ஆம் தேதி காலை 9.15 மணிக்குள் தேர்வு அறைக்குள் தேர்வாளர்கள் சென்று விட வேண்டும்.
அதன்பிறகு வருவோர் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
தேர்விற்கு பென்சில் பயன்படுத்தக் கூடாது, கருப்பு மை பால் பாய்ன்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தேர்வு விடைத்தாளில் கைரேகை. இரண்டு இடங்களில் கையெழுத்திட வேண்டும்.
மொத்த விடைகளின் எண்ணிக்கையை குறிப்பிடுவதில் தவறு இருந்தால் ஐந்து மதிப்பெண்கள் குறைக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இந்த திடீர் அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி தேர்வாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.