ஜூலை 26ல் நீட் தேர்வு: மத்திய அரசு அறிவிப்பு

0
57

ஜூலை 26ஆம் தேதி நீட் தேர்வுகள் நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ். – பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் பிளஸ் 2 மாணவர்கள், நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். நடப்பு கல்வி ஆண்டில் இந்த தேர்வு, மே 3ல் நடப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் தாக்கத்தால், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நீட் நுழைவு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ஜூலை 26ஆம் தேதி நடைபெறும். JEE Main தேர்வுகள் ஜூலை 18, 20, 21, 22, 23 தேதிகளில் நடைபெறும், JEE அட்வான்ஸ் தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here