சொந்த ஊரில் சதம் அடித்து அசத்திய அஸ்வின்

0
389

சுழற்பந்துவீச்சில் மட்டுமல்ல, பேட்டிங்கிலும் அசத்தி தான் ஒரு ஆல் ரவுண்டர் என்பதை தமிழக வீரர் அஸ்வின் நிரூபித்துள்ளார்.

இங்கிலாந்து எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் ரவிச்சந்திர அஸ்வின் தனது அசத்தலான ஆட்டத்தால்  சதம் அடித்து அசத்தினர். இது அவரது 5வது சதமாகும். 2011 ஆம் ஆண்டு டெஸ்ட் அரங்கில் களம் இறங்கிய அஸ்வின், இதுவரை 76 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

வலது கை சுழற்பந்து வீச்சாரான அஸ்வின், இதுவரை டெஸ்ட் அரங்கில் 391 விக்கெட்ககளை வீழத்தியுள்ளார். ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டைகளை  29 முறையும், ஒரு டெஸ்ட் ஆட்டத்தில் 10 விக்கெட்களை 10 முறையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். பந்து வீச்சில் கலக்கி வரும் அஸ்வின், பேட்டிங்கிலும் ஜொலிக்க தவறியதில்லை. 5 முறை சதம், 11 முறை அரை சதம் என 2 ஆயிரத்து 577 ரன்களை குவித்து பேட்டிங்கிலும் தனது திறமை நிரூபித்துள்ளார்.

நேற்றைய ஆட்டத்தில் 7 வது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய தமிழக வீரர் ரவிச்சந்திர அஸ்வின், ஒருபக்கம் விக்கெட்கள் சாய்தாலும், மறுமுனையில் அவர் நிலைத்து நின்று ஆடினர். தன் சொந்த ஊரான சென்னையில் சதம் அடித்த பெருமையையும், மகிழ்ச்சியையும் தனதாக்கி கொண்டார், ரவிச்சந்திர அஸ்வின்.  

இன்றைைய ஆட்டத்திலும் 3 விக்கெட்களை கைப்பற்றி அமர்களம் செய்தார், தமிழக வீரர் ரவிச்சந்திர அஸ்வின். மேலும் டெஸ்ட் அரங்கில் புதிய சாதனையையும் தனதாக்கி கொண்டார், அஸ்வின். அவர் 200க்கும் மேற்பட்ட இடதுகை பேட்ஸ்மென்களை ஆட்டமிழக்க செய்து, புதிய வரலாற்றையும் தமிழக வீரரான அஸ்வின் படைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here