செய்யூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா

0
37

செய்யூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஆர்.டி.அரசுவுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட எம்எல்ஏ ஆர்.டி.அரசு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பாதிப்படைந்து வருகின்றனர். கொரோனா பாதிப்புக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உயிரிழந்த நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஆர்.டி.அரசுவுக்கு கொரோனா தொற்று உறுதி யெ்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர், சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருகிறார். கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட ஆர்.டி.அரசுவின் உடல்நிலை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here