செப்.18ல் தொடங்குகிறது கியூசெட் தேர்வு…!

0
37

கியூசெட் நுழைவுத் தேர்வில், திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகமும் உட்பட நாடு முழுவதும் 18 பல்கலைக்கழகங்கள் பங்கேற்கின்றன.

தமிழ்நாட்டின் ஏழு மையங்கள் உட்பட நாடு முழுவதும் 141 நகரங்களில் இத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வின் மூலம், இளநிலை, முதுநிலை, ஒருங்கிணைந்த ஐந்தாண்டு மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

யு.ஜி.சி, ஜே.ஆர்.எப். அல்லது யு.ஜி.சி. – சி.எஸ்.ஐ.ஆர். – ஜே.ஆர்.எப். போன்ற தேசிய அளவிலான ஃபெல்லோஷிப் மற்றும் பிஎச்.டி படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்கள் கியூசெட் 2020 ஆன்லைன் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், அவர்கள் கியூசெட் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு பெறுகிறார்கள்.

தமிழ்நாட்டில், திருவாரூர், சென்னை, கோயம்புத்தூர், கடலூர், மதுரை, நாகர்கோயில் மற்றும் திருச்சி மையங்களிலும் நடத்தப்படுகிறது.
அனைத்து மாணவர்களும் கோவிட்-19 வழிகாட்டுதல்களை தேர்வு மையத்தில் முறையாக பின்பற்ற வேண்டும். இதுகுறித்து வழிமுறைகளை https://cucetexam.in எனும் இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here