சென்னை-கொல்கத்தா விமான சேவை 15ஆம் தேதி வரை ரத்து…!

0
78

மேற்கு வங்காள அரசு தடையால் சென்னை-கொல்கத்தா விமான சேவை 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பன்னாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. கடந்த மே மாதம் 25ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் உள்நாட்டு விமான சேவை மட்டும் தொடங்கி நடந்து வருகிறது. மும்பை போன்ற சில இடங்களுக்கு சென்னையில் இருந்து இன்னும் விமான சேவை தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் கொரோனா தொற்று அதிகமாக உள்ள சென்னை, டெல்லி, மும்பை, நாக்பூர், ஆமதாபாத் ஆகிய நகரங்களில் இருந்து விமானங்கள் வர மேற்கு வங்காள மாநில அரசு கடந்த மாதம் 6ஆம் தேதி முதல் தடை விதித்து உள்ளது. இதனால் சென்னையில் இருந்து தினமும் கொல்கத்தாவுக்கு செல்ல வேண்டிய 5 விமானங்களும், கொல்கத்தாவில் இருந்து சென்னை வர வேண்டிய 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டு இருந்தது.

தடை உத்தரவை மே.வங்க அரசு வருகிற 15ஆம் தேதி வரை நீடித்து உள்ளது. எனவே சென்னை – கொல்கத்தா இடையே வருகிற 15ஆம் தேதி வரை விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 15ஆம் தேதி வரை கொல்கத்தா செல்ல விமான டிக்கெட் எடுத்த பயணிகள், அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் அந்த விமான டிக்கெட்டை பயன்படுத்தி கொள்ளலாம் என விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here