சென்னை: அவசர பணிகளுக்கு 200 பேருந்து

0
554

சென்னையில் அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், செவிலியர் மற்றும் மருத்துவ சுகாதாரப் பணியாளர்களுக்காக 200 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நேற்று நள்ளிரவு 12 முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பணிகளில், அவசரப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்காக 200 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னையில் தாம்பரம், கூடுவாஞ்சேரி, பூந்தமல்லி, மணலி, நெற்குன்றம், தேனாம்பேட்டை, துரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here