சென்னையில் நேற்று மட்டும் 1,939 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 51,699ஆக அதிகரித்துள்ளது
சென்னையில், நேற்றுடன் (ஜூன் 27), 51 ஆயிரத்து, 699 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் தொற்று கண்டறியும் விகிதம் உயர்ந்தாலும், குணமடைவோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. அதன்படி, சென்னையில், 28 ஆயிரத்து, 823 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 20 ஆயிரத்து, 136 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். 730 பேர் பலியாகியுள்ளனர்.
மண்டல வாரியான பாதிப்பு விவரம்
மண்டல வாரியாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதன்படி, 5 மண்டலங்களில் 5,000ஐ கடந்துள்ளது கொரோனா பாதிப்பு. அதிகபட்சமாக இராயபுரத்தில் 7,455 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 6,221 பேருக்கும், தேனாம்பேட்டையில் 5,758 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக மணலியில் 868 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.