சென்னையில் வரும் 30ஆம் தேதிக்குள் கொரோனா குறையும்: அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன்

0
454

சென்னையில் வரும் 30ஆம் தேதிக்குள் கொரோனா நோய்த்தொற்றின் அளவு குறையும் என அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தகவல்

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

  • சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தண்டையார்பேட்டை மண்டலத்தில் 2500 பேர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • 120க்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம் ஏற்படுத்தப்பட்டு மக்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
  • தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொரோனா சிகிச்சை மையங்களை 3ஆக அதிகாரிக்க திட்டமிட்டு உள்ளோம்.
  • வரும் 30ஆம் தேதிக்குள் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் குறையும். முன்கள பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
  • ஊதியம் தரவில்லை என்பது தவறான கருத்து என்று அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கூறினார்.
  • கொரோனா பரிசோதனை முடிவுகள் காலத்தாமதமாவதை குறைக்க நடவடிக்கைகள் எடுப்பது குறித்து கவனத்தில் கொள்ளப்படும்.
  • கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் இல்லை என்பதற்காக வீடுகளிலேயே தனிமைபடுத்துவதாக சொல்வது தவறான ஒன்று.
  • அதே சமயத்தில் தேவைக்கு அதிகமாகவே படுக்கை வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் குடும்ப தலைவருக்கு முதல்வரின் சிறப்பு நிவாரண நிதியை பெற்று தர முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்தார்…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here