சென்னையில் பிரபல நடிகைக்கு சொந்தமான காரில் ஏராளமான மது பாட்டில்கள்

0
73

சென்னை கிழக்கு கடற்கரைச்சாலையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, பிரபல சினிமா நடிகைக்கு சொந்தமான காரில் ஏராளமான மது பாட்டில்கள் சிக்கின.

சென்னை கிழக்கு கடற்கரைச்சாலையில் முட்டுக்காட்டில் உள்ள சோதனைச் சாவடியில் நேற்றுமுன்தினம் இரவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த கார் ஒன்றை மறித்து, சோதனையிடப் பட்டது. சோதனையில் அந்த காரில் 96 பீர் பாட்டில்கள், 8 உயர்ரக மதுப்பாட்டில்கள் இருந்துள்ளன.

இதையடுத்து மதுபாட்டிகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்,  காரை ஓட்டி வந்த சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரையும் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர். அந்த காரின் பதிவு  எண்ணை கொண்டு விசாரணை நடத்தி போது, அது பிரபல திரையுலக நடிகை ரம்யாகிருஷ்ணனின் கார் என்பது தெரிய வந்தது.

காரில் காவல்துறையினர் சோதனையிட்ட போது, காரில் நடிகை ரம்யா கிருஷ்ணனும், அவரது சகோதரி வினயா கிருஷ்ணனும் இருந்ததாகவும் காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.

கைது செய்யபட்ட கார் ஓட்டுநர் செல்வ குமாரை, நடிகை ரம்யா கிருஷ்ணன் பிணையில் விடுவித்து அழைத்து சென்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here