சென்னையில் பாதிப்பு அதிகரிப்பால் மக்கள் அச்சப்பட வேண்டாம்: சுகாதாரத்துறை செயலர்…!

0
50

சென்னையில் அதிகரித்து வரும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பால் மக்கள் அச்சப்பட வேண்டாம். பரிசோதனைகள் அதிகரிக்கப்பதால் தான் தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்…!

சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட கொருக்குப்பேட்டை பகுதியில் மருத்துவ முகாமினை ஆய்வு செய்த சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

  • தமிழகம் முழுவதும் பரிசோதனைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது.
  • அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனைகள் 32 ஆயிரமாகவும், சென்னையில் 9 ஆயிரம் முதல் 10 ஆயிரமாகவும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
  • கொரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கையை வைத்து மக்கள் அச்சப்பட வேண்டாம்.
  • தமிழகம் முழுவதும் மருத்துவ முகாம்கள் மூலம் அதிகமான தொற்றுகள் கண்டறியப்பட்டு வருகின்றன.
  • ஏதேனும் ஒரு அறிகுறி இருந்தாலே அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
  • இறப்பு எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதே அரசின் பிரதான நோக்கம்.
  • சென்னையில் உள்ள 39 ஆயிரம் தெருக்களில், 9,509 தெருக்களில் மட்டும் தான் தொற்று உள்ளது. இதில் 812 தெருக்களில் மட்டுமே 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்று உள்ளது.
  • குடிசை பகுதிகளில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. கொரோனா என்றால் மரணம் என்ற எண்ணத்தில் இருந்து மக்கள் வெளியே வர வேண்டும். குணமடைவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

தொண்டையில் வரக்கூடிய இதர வைரஸ் காய்ச்சல் போன்றது தான் கொரோனா. எனவே, நோயாளிகள் தப்பித்து ஓடுவது, தற்கொலை செய்வது, நோயாளிகளை புறக்கணிப்பது உள்ளிட்ட செயல்களை மக்கள் தவிர்க்க வேண்டும். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் தான் அதிகமான பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தொற்று பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் பரிசோதனைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது.

நோயாளிகளை அழைத்து வர கூடுதல் ஆம்புலன்ஸ் இயக்கவும், தனியார் ஆம்புலன்ஸ்களை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் படுக்கை வசதிகளை அதிகரிக்க பல்வேறு இடங்கள் கணக்கெடுக்கப்பட்டு, கூடுதல் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கொரோனா மரணங்களை மறைத்தல் உள்ளிட்ட குளறுபடி செய்யும் தனியார் மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here