ஒமைக்ரான் தொற்று சமூக பரவலாக மாறியுள்ளது என்றும் சென்னையில் கொரானாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.
Omicron உறுதி செய்யப்பட்ட 34 நபர்களில் 29 நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 5 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.
118 நபர்களுக்கு S ஜீன் மாதிரிகள், பரிசோதனைக்காக மத்திய அரசின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது; முடிவுகள் இன்று, நாளை வரும்.
நட்சந்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கண்காணிக்கப்படும் எனவும் பொது இடங்களில் மக்கள் கூடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.