சென்னையில் ஒரே நாளில் 1,530 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

0
10

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,530 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் அங்கு இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1.37 லட்சமாக அதிகரித்துள்ளது…!

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 989 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,50,572 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து இன்று கோவையில் 485 பேருக்கும், செங்கல்பட்டில் 324 பேருக்கும், சேலத்தில் 292 பேருக்கும், திருவள்ளூரில் 283 பேருக்கும், கடலூரில் 268 பேருக்கும், திருப்பூரில் 262 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 198 பேருக்கும், திருவண்ணாமலையில் 189 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு

இன்று சென்னையில் 12 பேரும், சேலத்தில் 9 பேரும், கடலூர், திருவள்ளூரில் தலா 5 பேரும், செங்கல்பட்டு, கோவையில் தலா 4 பேரும், தென்காசி, தேனி, திருப்பத்தூர், திருவண்ணாமலையில் தலா 3 பேரும், கன்னியாகுமரி, மதுரை, தஞ்சாவூர், வேலூரில் தலா 2 பேரும், திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், திருச்சி, விருதுநகரில் தலா ஒருவரும் என 68 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

குணமடைந்தவர்கள் விவரம்

இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,530 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அங்கு மொத்தம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,37,685 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கடலூரில் 523 பேரும், கோவையில் 437 பேரும், திருப்பூரில் 291 பேரும், திருவள்ளூரில் 268 பேரும், செங்கல்பட்டில் 236 பேரும், திருவண்ணாமலையில் 211 பேரும், சேலத்தில் 166 பேரும், விழுப்புரத்தில் 161 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here