சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 407 அம்மா உணவகங்களில், ஊரடங்கு முடியும் வரை இலவசமாக உணவு வழங்க மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் இடம், பெயர், தொலைப்பேசி எண்ணை பெற்றுக்கொண்டு இலவச உணவு தர உத்தரவு…!

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பிறப்பித்துள்ள உத்தரவு:
தமிழக அரசு உத்தரவின்படி சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக, மக்களின் நலன் கருதி, சென்னை மாநகராட்சியில் இயங்கி வரும் 407 அம்மா உணவகங்களில் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூன்று வேளையும் இலவச உணவு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இலவச உணவு வழங்குவற்கு ஆன செலவை, இலவச உணவு வழங்க கோரிய தன்னார்வலர்களிடம், அம்மா உணவகத்தில் பணிபுரியும் சுய உதவி குழுக்கள் பெற்று, வங்கிக்கணக்கில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.