சூரரை போற்று ‘U’ சான்றிதழ்: OTT தளத்தில் வெளியிட வாய்ப்பு

0
78

சூரரை போற்று திரைப்படத்திற்கு “U” சான்றிதழை வழங்கியுள்ளது சென்சார் போர்டு. OTT தளத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘சூரரை போற்று’. விமானி ஒருவரின் உண்மை கதையை தழுவி எடுக்கப்படும் இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் ஆடியோ வெளியீடு தமிழ் சினிமாவிலேயே முதல்முறையாக நடுவானில் விமானத்தில் நடத்தப்பட்டது.

மே 1ஆம் தேதி வெளியாவதாக கூறப்பட்ட இப்படம் கொரோனா ஊரடங்கினால் ரிலீஸ் தேதி தள்ளி சென்றது. இதற்கிடையில் இப்படத்தின் சென்சார் முடிந்து படத்திற்கு “U” சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தியேட்டர்கள் திறக்கப்பட்ட உடனே சூரரைப் போற்று படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் எனக்கு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா தயாரித்து அவரது மனைவி ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தால் திரைப்படம் பல தடைகளை தாண்டி, திரையரங்கு உரிமையாளர்களின் எதிர்ப்பையும் மீறி “OTT” தளத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோன்று சூரரைப் போற்று திரைப்படமும் “OTT” தளத்தில் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here