சுஷாந்த்சிங் தற்கொலை வழக்கு – காதலி ரியாவிடம் சிபிஐ குழு விசாரணை

0
336

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விசாரணை தொடரபாக சிபிஐ குழு, நடிகை ரியா சக்கரபோர்த்தியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் வழக்கை சிபிஐ அதிகாரிகள் குழு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்கரபோர்த்தி மீது பணமோசடி, தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட வழக்குகளின் கீழ் அமலாக்கத்துறை விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதனிடையே நடிகை ரியாவுக்கு போதை பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பது அவரது வாட்சப் உரையாடல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறை, நடிகை ரியா மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விசாரணை தொடர்பாக நடிகர் ரியா சக்ரபோர்த்திக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. இதை தொடர்ந்து அவர் மும்பை, டிஆர்டிஓ விருந்தினர் மாளிகையில் சிபிஐ குழு முன் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here