சில்லரை காசு முதலீடு: இன்று கோடிக்களில் புரளும் Infosys #குட்டி ஸ்டோரி

0
801

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த நாராயண மூர்த்தி, ஒருவித குழப்பத்துடன் வீட்டிற்கு வந்தார்.

அவரது மனைவி சுதா என்னவென்று விசாரிக்க, “தன் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு தொழில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்”.

சுதாவுக்கு இச்செய்தி அதிர்ச்சியாக இருந்தது. ஏற்கனவே புதிய தொழில் தொடங்கி பெரும் நஷ்டமடைந்து, அதனால் சுட்ட காயமே இன்னும் ஆறாத நிலையில் மறுமடியும் புதிய தொழிலா! என்று, நாராயண மூர்த்தியின் மனைவி சுதாவும் குழம்பி போனார்.

நாராயண மூர்த்தி பெரிய மென்பொருள் நிறுவனத்தில் உயர் பதவியில் உள்ள நபர். கைநிறைய ஊதியம். இருப்பினும் சொந்தமாக தொழில் தொடங்கி இந்தியாவில் யாரும் எட்ட முடியாத உயரத்தை தொட வேண்டும் என்ற தீராத ஆசைக் கொண்டவர், நாராயண மூர்த்தி.

இச்சம்பவம் நடைபெற்ற சில ஆண்டுகளுக்கு முன் தான், #System Research Institute (SRI) என்ற மென்பொருள் நிறுனத்தை தன் நண்பர்களுடன் தொடங்கி பெரும் நஷ்டத்தை சந்தித்தவர் தான் நாராயண மூர்த்தி.

இப்போ மறுமடியும் புதிய மென்பொருள் தொடங்குவதாக தன் கணவர் கூறியவுடன் என்ன சொல்வதென்றே சுதாவுக்கு தெரியவில்லை.

புதிய தொழில் தொடங்க வேண்டுமென்றால் நிறைய பணம் நிச்சியம் தேவைப்படும். 

நாராயண மூர்த்தியோ மாதச் சம்பளத்தையே நம்பி இருப்பவர்.

“நண்பர்களுடன் சேர்ந்து புதிய தொழில்  பண்ணப் போறேனுச் சொல்லுறீங்க, அது என்ன தொழில்” என்று சுதா கேட்க.

“நாம் முன்னாடி ஆரம்பித்து, தோல்வியையும் நஷ்டத்தையும் சந்தித்த தொழில், #மென்பொருள் நிறுவனம்.

அதை கேட்ட சுதாவுக்கு ஒரு பக்கம் அச்சம் அதிரித்தாலும், மற்றொரு பக்கம் கணவருக்கு பக்கப் பலமா இருந்தாக வேண்டும்.

எவ்வளவு முதலீடு தேவைப்படும் என்ற சுதாவின் கேள்வி, “நண்பர்கள் நாங்கள், ஆளுக்கு 10 ஆயிரம் ரூபாய்” முதலீடு செய்யனும்” என்றார், நாராயண மூர்த்தி.

சேமிப்பும் இல்லை, அடமானம் அல்லது விற்கவோ நகைகள், சொந்த இடமும் இல்லை. என்ன செய்வது என்று இருவரும் தெரியவில்லை.

அப்போது தான் மனைவி சுதாவுக்கு ஒரு யோசனை. “நாம், அப்போ…அப்போ சில்லரைக் காசுகளை ஒரு பெட்டியில் போட்டு வைப்போமே, அதனை எடுத்துப் பார்த்தால் என்ன? ” என்று தோன்றியது.

அப்போதைக்கு, வேற வழியில்லை உடனே சமையில் அறையில் இருந்த சிறிய பெட்டகத்தைப் போட்டு உடைத்தார்கள்.

அதில், சொல்லி வைத்தார் போல ஏரதாள 10 ஆயிரம் ரூபாய் இருந்தது.

சுதா, தன் கணவர் மேல் வைத்த நம்பிக்கையால் அரை மனதுடன் சம்மதம் தெரிவித்து, 10 ஆயிரம் ரூபாயை தூக்கிக் கொடுத்தார்.

அந்த 10 ஆயிரம் ரூபாய் முதலீடு தான் 10  ஆயிரம் கோடிகளுக்கு மேல் வருமானம் ஈட்டப் போகிறது என்பதை அன்று யாரும் எண்ணிக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆம், நாராயண மூர்த்தி தொடங்கி மென்பொருள் நிறுனத்தின் பெயர் தான் “Infoys“. நிறுவனம் வளர்ச்சியடைவே நிறுனத்தின் முதன்மை ஆளா மாறி, “Infosys நாராயண மூர்த்தி” என்று இந்தியா முழுவதும் அறியப்பட்டார்.

கோடிக்கணக்கில் புரளும் அவ்வளவு பெரிய சாம்ராஜயமே, சிறுக..சிறுக சேமித்த காசில் இருந்து தான் தோன்றியது. 

சிறிய முதலீடாக இருந்தாலும், கடின முயற்சியால் வெற்றியடையலாம் என்பதற்கு Infosys நாராயண மூர்த்தி ஒரு உதாரணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here