கொரோனா பாதிப்பு குறித்து 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

0
36

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை தடுப்பது குறித்து 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை மேற்கொண்டார்

நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்கள் கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனா பாதிப்பில் முன்னணியில் உள்ள 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில சுகாதார அமைச்சர்களும் பங்குபெற்றனர். 

தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், டெல்லி மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here