கொரோனாவால் பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு உயிரிழந்தார்

0
1151

சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

கொரோனா பாதிக்கு சென்னை கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாண்டு, அவரது மனைவி சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை பாண்டு உயிரிழந்தார். அவரது மனைவி குமுதாவுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.

கேப்பிடல் லெட்டர்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்த நடிகர் பாண்டுவுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

அதிமுக கட்சி கொடியை வடிவமைத்து கொடுத்தவர் நடிகர் பாண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

பல திரையுலக பிரபலங்களின் இல்லம், நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து கொடுத்தவர் பாண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here