கேரளா மிகவும் பாதுகாப்பானது: இத்தாலியர் கருத்து…!

0
492

கேரளாவிற்கு சுற்றுலா வந்த இத்தாலி பயணி, கேரளா மிகவும் பாதுகாப்பானது என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு பல மாநிலங்களில் அதிகரித்து வந்தாலும் மாநில அரசின் நடவடிக்கைகளால் கேரளாவில் பாதிப்பு விகிதம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரளாவின் வர்க்காலா பகுதிக்கு மார்ச் 13ல் பிரிட்டன் மற்றும் இத்தாலிய சுற்றுலா பயணிகள் சிலர் சுற்றுலா வந்தனர். கேரள மாநிலத்தின் பல பகுதிகளிலும் கொரோனா அச்சுறுத்தலால் பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் மூலம் பரிசோதனை செய்த சுற்றுலா பயணிகளில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

தொடர்ந்து, மற்ற பிரிட்டன் பயணிகளுக்கு தொற்று இல்லை. இருப்பினும் பாதுகாப்புக்காக தனிமைப்படுத்தப்பட்டனர். இத்தாலிய பயணி நோய் குணமடைந்து நாடு திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக வந்த பயணிகளில் ஒருவரான ராபர்டோ டோனிஸோ கூறுகையில், “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கும் நன்றி கூறுகிறேன். எல்லாம் முடிந்ததும், நான் திரும்பி வர விரும்புகிறேன். கேரளா எனது வீடு போன்றது, கேரளா மிகவும் பாதுகாப்பானது. இப்போது நான் எனது நாட்டுக்குச் செல்ல வேண்டும், ஆனால் நான் திரும்பி வருவேன்” இவ்வாறு கூறினார்.

மேலும் பெங்களூரு செல்வதற்கு மாநில அரசு ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்தது. பின் அவர்கள் தங்களது நாடுகளுக்கு செல்ல முடியும். முன்னதாக, ஏப்.9ல் முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுகையில், பிரிட்டனை சேர்ந்த 7 பயணிகளும் இத்தாலியை சேர்ந்த பயணியும் நோய் குணமடைந்து விரைவில் நாடு திரும்ப உள்ளனர். எர்ணாகுளம் மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் குணமடைந்து நாடு திரும்புகின்றனர்.

இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு முதலில் கண்டறியப்பட்டது கேரளாவில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது நாட்டிலேயே கொரோனா தடுப்பு பணி மற்றும் கொரோனா நோய் தொற்றில் இருந்து முன்னேற்றம் என கேரளா முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here