குரலற்றவர்களின் குரலான “மாநாடு” – தோலுரிக்கப்பட்ட மத அரசியல் : பட விமர்சனம்

0
440

நிறைய பிரச்னைகளுக்கு சொந்தக்காரரான நடிகர்.சிலம்பரசன் நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், யுவன் இசையில் உருவாகி, திரைக்கு வந்துள்ள திரைப்படம் மாநாடு. 

படத்தின் லூப் என்னும் புதியவகை யுக்தி இந்திய சினிமாவுக்கு புதிய ஒன்று. ஆனால், ஹாலிவுட் படத்தின் ஸ்டைல் இல்லாமல் படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபு தனது அருமையான திரைக்கதை மற்றும் இயக்கத்தின் வாயிலாக படத்தை இரண்டரை மணிநேரம் தடையில்லாமல் படத்தை இறுதிக்காட்சி வரை ரசிகர்களை கொண்டுச் செல்கிறார்.

படத்தில் ஒருபாடல் மட்டும் இடம்பெற்று இருந்தாலும், நடிகர் சிம்பு,நடிகர் எஸ்.ஜே.சூர்யா திரையில் தோன்றும் காட்சிகளில் பின்னணியில் ஒளிக்கப்படும் BGM ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைக்கிறது.

இந்து-முஸ்லீக் மதப் பிரிவினை, மத அரசியல், மத கலவரம் எப்படி உருவாக்கப்படுகிறது, முஸ்லீக் மதத்தை தொடர்ந்து பல ஆண்டுகளாக மக்கள் பார்க்கும் விதம் என பல திரைப்படங்களில் இடம்பெறாத விசயங்கள் இப்படத்தில் இயக்குநர் வெங்கட்பிரபு சொல்லி் இருக்கிறார்.

தன்னுடைய பெயருக்கு முன் மட்டும் #AtmanSilambarasan என்று போட்டுக் கொள்ளாமல் நிஜத்திலும் சரி, படத்திலும் சரி சமத்துவம் (Equality) பற்றி பேசி வருவது நடிகர்.சிலம்பரசனை பாராட்ட வைக்கிறது.

படத்தில் 4 தூண்கள் உள்ளன. சிலம்பரசன்,யுவன், எஸ்.ஜே.சூர்யா, வெங்கட்பிரபு.

படத்தில் வரும் எஸ்.ஜே சூர்யா கதாபாத்திரம் நமக்கெல்லாம்  80’s மற்றும் 90’s காலக் கட்டத்தின் நடிகர் சத்தியராஜை நினைவுப்படுத்துகிறது. நகைச்சுவை கலத்த வில்லத்தனத்தை கதாபாத்திரத்தில் வெளிப்படுத்தி “இவர் இல்லனா, இழப்பு மாநாடு படத்துக்கு தான்” என்று ரசிகர்கள் கூறும் அளவுக்கு எஸ்.ஜே.சூர்யா தனது சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுகளைத் தட்டிச் சென்றுள்ளார்.

படத்தில் தேவையற்ற காட்சிகள் என்று எந்தவொரு காட்சியும் இல்லாமல் ரசிகர்களுக்கு சலிப்புத் தட்டாமல் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருப்பது சிறப்பு.

புதிய கதைக்களம் என்றாலும் மத அரசியல் பற்றிய வெளிப்படையாக பேசிய படம் என்பது படத்தின் மற்றொரு சிறப்பம்சம்

நடிகர்கள் விஜயகாந்த்,அர்ஜூன் படங்களில் தீவிரவாதிகள் முஸ்லீக்-களாக காட்சிப்படுத்தி, அதில் பல வெற்றிகளைக் கண்டு இருப்பதை ஒருபுறம் வைத்தாலும், இயக்குநர் மணிரத்தினம் இயக்கிய “பம்பாய்” படத்தில் மத  பிரிவினை, மதச் சண்டை பற்றிய கதை என்றாலும், இதுகுறித்த மற்றொரு உண்மை முகத்தை “மாநாடு” படத்தில் காட்டியதாகவே கூற வேண்டும்.

“பாமர் மசூதி” இடிக்கப்பட்ட காலக்கட்டத்தில் அப்பகுதியில் உள்ள முஸ்லீக் மக்களின் நிலை என்ன? முஸ்லீக் மக்கள் யார்? என தமிழ் சினிமாவில் முஸ்லீக் மக்களுக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார், நடிகர். சிலம்பரசன்.

படத்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களை கச்சிதமாக நடித்த நடிகர்களான மனோஜ் பாரதி, உதயா, எஸ்.ஏ.சந்திரசேகர்,வாகை.சந்திர்சேகர்,சுப்பு, பிரேம்ஜி, கருணாகரன், டேனி, ஆகாஷ் ஆகியோர் படத்திற்கு பலம்.

ரிச்சர்ட் அவர்களின் ஒளிப்பதிவு படத்தின் வெற்றிக்கு வலுச் சேர்கிறது. திரைப்படத்தின் சுவாரஸ்யம் குறையாமல் பார்த்துக் கொண்ட படத்தின் படத்தொகுப்பாளர் பிரவீன் அவர்களுக்கு இது 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

“மாநாடு” நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கு மட்டுமல்ல “சில காலமாக முன்பு போல் உங்கள் இசையில்லை என்று குறைச் சொல்லப்பட்ட இசையமைப்பாளர் யுவன்” அவர்களும், இயக்குநர் வெங்கட்பிரபு, நடிகர்.எஸ்.ஜே.சூர்யா என 4 பேருக்கு மிகப்பெரிய ComeBack தான்.

மொத்தத்தில், நீ “இந்துவாக இரு, முஸ்லீக்-மாக இருக்கு, கிறிஸ்துவனாக இரு” ஆனா முதலில் நாம் சார்ந்து இருக்கும் மதத்தை வைத்து நடக்கும் அரசியலை கற்றுக்கொள்” என்பதை படம் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here