கொரோனா காலம் என்பதால் தமிழக அரசு தனியார் தொலைக்காட்சி மற்றும் அரசு நடத்தும் கல்வி தொலைக்காட்சி மூலம் பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வருகிறது.
இதற்கென பிரத்கேய ஏற்பாடுகளையும், ஆசிரியர்களை தமிழக கல்வித்துறை சார்பில் தயார் செய்யப்பட்டு மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கல்வித் தொலைக்காட்சி சார்பில் தயாரிக்கப்பட்ட திருக்குறள் ஒன்று மாணவர்களுக்காக தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டது.
இதில் திருவள்ளுவர் காவி உடை அணிந்து கொண்டும், நெற்றில் பட்டை, கழுத்தில் ருத்ராட்சை உடனும் அக்மார்க் பிஜேபி-யின் உருவாக்கம் போல காட்சியளிக்கிறார்.
ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று உலக மக்களுக்கு பொதுவான கருத்துகளை 1,330 குறள்களில் கூறிய, வள்ளுவரை இப்படி மத-சாயம் பூசி கேவலப்படுத்துவதா என்று சமூக ஆர்வலர்களும், தமிழ் ஆர்வலர்களும் கேள்கி எழுப்பி உள்ளனர்.
அதேசமயத்தில், இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் மத்தியில் மதத்தை வைத்து ஆட்சிச் செய்யும் பாஜகவுக்கு அடிமை அரசாக, அதிமுக அரசு இருப்பதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.