புலிக்குத்தி பாண்டியன் படத்தின் மூலம் நடிகர்.விக்ரம் பிரபுவும்,நடிகை லட்சுமி மேனனும் மீண்டும் இணைந்துள்ளனர்.
இப்படத்தை இயக்குநர்.முத்தையா இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். ரகுநந்தன் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். “புலிக்குத்தி பாண்டியன்” படம் தியேட்டர் அல்லது ஓ.டி.டி-களில் வெளிவராமல் நேரடியாக டிவியில் வெளியாகிறது.ஆம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் 15ஆம் தேதி சன் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிப்பரபாகும் என சன் தொலைக்காட்சி குழுமம் அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும், இப்படத்திற்கான டிரெய்லர் சன் டிவியின் அதிகாரப் பூர்வ யூடிப் சேனலில் வெளியிடப்பட்டது.இதனைப் பார்த்த ரசிகர்கள் அச்சு-அசல் கொம்பன் படம் போல உள்ளது. இயக்குநர் முத்தையா குட்டிப்புலி, கொடிவீரன்,கொம்மபன் என தன்னுடயை படங்களையே இணைந்து “புலிக்குத்தி பாண்டியன்” எடுக்கப்பட்டதாக ரசிகர் விமர்சித்து வருகின்றனர்.அட்லி பிறர் படங்களில் இருந்து தான் கதை மற்றும் காட்சிகளை சூட்டு எடுப்பார், ஆனால் முத்தையா தன்னுடைய படத்தையே மறுபடியும் எடுத்துள்ளார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.