கர்நாடக அணைகளில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

0
32

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.

கர்­நா­ட­காவில் காவிரி நீர் பிடிப்பு பகுதி­களில் தென்­ மேற்கு பரு­வ­மழை தீவி­ரமடைந்துள்ளது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் உபரி நீர் அதிகரித்துள்ளது. கர்நாடகாவின் கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணை­ களில் இருந்து வினாடிக்கு 41,500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிர ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நீர் மட்­டம் இன்று காலை நிலவரப்படி 64 அடியாகவும், நீர் இருப்பு 27.91 டி.எம்.சியாகவும் இருந்தது. அடிக்கு நீர்வரத்து 3,625 கன அடிகயாக இருந்தது. இதனிடையே  கர்­நா­டகா அணை­ களில் திறக்­கப்­பட்ட நீர் இன்று மாலை அல்லது இரவுக்குள் மேட்­டூர் அணையை வந்­த­டையும் என்­று எதிர்பார்க்கப் படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here