திருவள்ளூர் அடுத்த பழவேற்காட்டில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அரிய வகை டால்பின்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் உள்ள கடற்கரையில் சுமார் ஒரு டன் எடையுள்ள டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.
சமீபக் காலமாக அனல் மின் நிலையம், என்னை நிறுவனங்கள், துறைமுகம் ஆகியவற்றிலிருந்து வெளியேற்றப்படும் எண்ணெய் கழிவுகள் கடலில் கலப்பதால் கடல் மாசு அடைந்து விடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால் ஏற்கனவே இதுபோன்று டால்பின், புள்ளி திமிங்கலம், ஆமைகள் போன்ற அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்து கரை ஒதுங்குவது வேதனை தெரிவித்த விலங்கியல் ஆர்வலர்கள் கடல் மாசை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.