கராத்தேவில் உலக அளவில் சாதனைப் படைக்கும் இரட்டை குழந்தைகள்: ஆளுநர்,முதல்வர் பாராட்டு

0
199

புதுச்சேரி காரைக்காலை சேர்ந்த இரட்டையர்கள் ஸ்ரீவிசாகன்,ஸ்ரீஹரிணி. தற்போது தனியார் பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படிக்கும், இவர்கள் மாஸ்டர். டாக்டர் வி.ஆர்.எஸ் குமார் என்னும் பயிற்சியாளரிடம் மூன்று வயது முதல் கராத்தே,சிலம்பம்,யோகா,கிக் பாக்ஸிங் குபுடோ,தேக்வாண்டோ போன்ற எண்னற்ற தற்காப்பு கலைகலை கற்று தேசிய மற்றும் சர்வதேச அளவில் 200க்கும் மேற்பட்ட பதக்கங்களை குவிந்துள்ளனர்.

 உலகிலேயே இரட்டையர்கள் முதன்முதலாக 9 வயதுக்குள் கராத்தேவில் இரண்டு பிளாக் பெல்ட்கள், தேசிய மற்றும் சர்வதேச அளவில் அதிக பதக்கங்களை வாங்கி உலக சாதனை படைத்துள்ளதும், இவர்களே.

பல்வேறு உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்து புதுச்சேரி ஆளுநர், முதல்வர் மற்றும் பல்வேறு தரப்பினரிடமும் பாராட்டு மற்றும் கவுரவ டாக்டர் பட்டம் மற்றும் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்கள் இரட்டையர்களான, ஸ்ரீவிசாகன், ஸ்ரீஹரிணி.

இந்த இரட்டையர்களின் பல்வேறு சாதனைகளை இவர்கள் பயிலும் பள்ளியின் சார்பாக புத்தகமாக தயார்செய்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அவர்களின் கைகளால் வெளியிடப்பட்டது.

மேலும் இவர்கள் சாதனைக்கு மகுடம் சேர்க்கும் விதமாக திருச்சி தேவர் கலையரங்கத்தில் தமிழக கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அன்பில் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் தமிழகப் பண்பாட்டுக் கழகத்தால் ராஜ கலைஞர் விருதும் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here